Wednesday, December 25, 2013

OneIndia Interview

சன் டிவியில் தெய்வமகள் தொடரில் அமைதியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளவர் வாணி போஜன்.இந்த சின்னத்திரை நாயகிக்கு சினிமாவில் நடிக்க ஆசையாம். அதற்கான பயிற்சிக்களமாகவே சீரியல் நடிப்பை பயன்படுத்தி வருகிறார்.மீடியாவில் எல்லோருக்கும் ஒரு ரோல்மாடல் இருப்பதைப் போல வாணி போஜனுக்கும் ரோல்மாடல் இருக்கிறார். அவர் ராடான் டிவியின் ராதிகாவாம்.

சீரியல் நாயகி

விஜய் டிவியில் ஆஹா தொடரில் அறிமுகம். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் என நடித்து வருகிறார் வாணி போஜன்.
ஏர்ஹோஸ்டஸ்
கிங்ஃபிஷர் விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் ஆக மூன்றாண்டுகாலம் பறந்த வாணி போஜன், சைடில் மாடலிங் வேலையும் செய்து வந்தாராம். இப்போது மாடலிங் மூலமாக சின்னத்திரையில் நாயகியாகியுள்ளார்.

யோக டீச்சர்

சினிமாவில் நடிகை அனுஷ்கா யோகா டீச்சராக இருந்து நடிக்க வந்தவர். அதேபோல வாணி போஜன் யோகா கற்றுக் கொண்டுள்ளாராம். மலேசியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் யோகா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.


குளிர் தேசம்

ஏசி போட்டுக் கொண்ட ஊரான நீலகிரி மாவட்டம் குன்னூர்தான் வாணியின் சொந்த ஊர். அப்பா போஜன், அம்மா பார்வதி, உறவினர் எல்லோரும் குன்னூரைச் சுற்றியே வசிக்கின்றனராம்.

ராதிகா போல

டிவியில் நடிகை ராதிகா போல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையாம். விளம்பரத்தில் நடிக்கும் போதே பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்ப்பு இருந்ததாம் அதை சமாளித்து, அவர்களுக்கு புரியவைத்தே சீரியலில் நடிக்க வந்தேன் என்கிறார்
.
சினிமா ஆசை

கமல் ரசிகையான வாணி போஜனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை அதிகமிருக்கிறது. இளம் நடிக்கர்களான சூர்யா, தனுஷ், சித்தார்த் படங்களை தவறாமல் பார்க்கும் இவருக்கு அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கிறது. அதற்கான பயிற்சிக்களமாகத்தான் சீரியலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.


ஹோம்லியா நடிக்கணும்

சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படும் வாணி, கேரக்டருக்கு ஏற்ப கொஞ்சம் கிளாமர் தவறில்லை என்கிறார்.

முதல் காதல்

பள்ளிப்பருவத்தில் இருந்தே நிறைய காதல் கடிதங்கள் வந்துள்ளதாம் வாணிக்கு. அவற்றை நினைத்தால் இப்போது காமெடியாக இருக்கிறது என்று கூறும் வாணி, திருமணம் பற்றி இப்போதைக்கு நினைத்துப் பார்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்கிறார்.